மாண்ட்போர்ட் தமிழ்ச் சங்கம்
உலகில் சங்கம் வைத்து வளர்ந்த ஒரே மொழி தமிழ் தான்.!!! தமிழே உலகின் முதன்மொழி என்பதற்கும் இதுவே போதுமானதொரு சான்றாகத் திகழ்கிறது.
இதன் நீட்சியாக ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழ்மொழி தன் வேர்களைப் பரப்பியதில் வியப்பொன்றுமில்லை.!!!
மாண்ட்போர்ட் பள்ளியில் மொழிப்பாடமாகத் தமிழ்மொழி பயிலும் மாணவ – மாணவியருள் இலக்கிய வேட்கையும், படைப்பாற்றலும், தமிழ் மொழியின்மீது ஆர்வமும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, மாண்ட்போர்ட் தமிழ்ச்சங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவ – மாணவியரின் படைப்பாற்றலை வளர்க்கும் பொருட்டு தமிழ்மொழியில் சிறுகதை, கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மாண்ட்போர்ட் தமிழ்ச் சங்கம் சார்பில் பள்ளியில் கிராமிய மணத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்ச் சங்கத் தொடக்க விழா மற்றும் தமிழ்ச் சங்கப் படைப்பிலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாக்களில் புகழ்பெற்ற தமிழறிஞர்களது சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும்.
மாணவ – மாணவியரின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்கில் அவ்வப்போது சிறப்புப் பட்டி மன்ற நிகழ்வுகள் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறும்.
மாணவ – மாணவியரின் படைப்புகள் தமிழ் நாளிதழ், வார, மாத இதழ்களில் வெளிவர வழிகாட்டுவதோடு, பள்ளி ஆண்டு மலரிலும் இடம்பெற வகைசெய்யப் படுகிறது.
மேலும் தமிழ் மாணவ – மாணவியரின் படைப்புகளை மட்டும் கொண்டு, தமிழ்ச் சங்கம் சார்பில் “சாரல்” என்றொரு சிற்றிதழும் அவ்வப்போது (அச்சிதழ் / மின்னிதழாக) வெளியிடப் படுகிறது.